Friday, October 16, 2009
இயேசு தீபாவளி - அகத்தின் அசுரனை ( தீமையை) அழித்த கொண்டாட்டம்
இயேசு தீபாவளி - அகத்தின் அசுரனை ( தீமையை) அழித்த கொண்டாட்டம்
| இது இந்து, ஜெயின், சீக்கிய மதத்தினர் கொண்டாடும் பண்டிகை. இப்பண்டிகை 3 அல்லது 4 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். அந்நாட்களில் தீமையை நன்மை வென்றதை குறிக்க வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படும். தீபாவளி தினம் கொண்டாடத்தின் உச்சகட்டம். அன்றை தினத்தில் குடும்பமாக சேர்ந்து எண்ணெய் ஸ்நானம் செய்து, பலகாரங்களும் பரிசுகளும் பரிமாறி, அதன் பின் குடும்பமாக சேர்ந்து பட்டாசு கொளுத்துவது வழக்கம். அதுகாலையிலே வெடிவெடிக்க ஆரம்பித்து நாள்முழுவதும் தொடரும். தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்தையும் குதுகூலத்தையும் சொல்லி மாளாது. |
| அதை அனுபவத்தவருக்கு மாத்திரம் புரியும்.நம்முடைய பாரம்பரியக் கதைகளில் நன்மை தீமையை வென்றதை குறித்து அநேக கதைகள் உண்டு. அவை பெரும்ப்பாலும் அசுரன் ( அரக்கன்) அழிவதாகவே அமையும். தீபாவளி பண்டிகை இராமர் வனவாசம் சென்று வந்ததையோ அல்லது கிருஷணன் நரகாசுரனை வென்றதையோ மையமாக வைத்து கொண்டாடப்படும். நிறைய இடங்களில் பட்டாசு வெடிகள் நிறைந்த இராவண உருவம் கொளுத்தப்பட்டு அழிக்கப்படும். | ![]() |
இன்றைய சரித்திரத்தில் அக தூய்மையை தேடின உன்னதமான ஒரு மனிதனை நாம் எடுத்து கொள்வோம். அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தி ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தார்.. அகதூய்மை தேடி அவர் எடுத்த முயற்சிக்களுக்காக அவரை எண்ணி வியந்திருக்கிறேன். 'சத்திய சோதனை' என்னும் அவருடைய சுய சரிதையில் வழியனுப்புதல் என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதியது, " உண்மையான தூய்மை ஒருவனுக்கு வேண்டுமானால் அவன் தன் ( விருப்பங்களை தியாகம் செய்து ) எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு தன்னை எதிர்த்து நிற்கும் அன்பு மற்றும் வெறுப்பு, ஒட்டுதல் மற்றும் விடுத்தல் ஆகிய அலைகளை எதிர்த்து எழும்ப வேண்டும். இந்த முப்பரிமாண தூய்மையை நான் ஓயாமல் தொடர்ந்தாலும் அந்நிலையை நான் இன்னும் அடையவில்லை. ஆனாலும் எனக்கு முன்பாக ஒரு கடினமான பாதை உண்டு என்பதை நான் அறிவேன்".
"மகா ஆத்துமா" என்ற பட்டதை வென்ற மகாத்மா காந்தி இவ்வார்த்தைகளை சொல்வாரானால் நீங்களும் நானும் எம்மாத்திரம். உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு எதிர்பார்ப்பு உண்டு?. நமக்குள் இருக்கின்ற அசுரனனை முழுவதுமாக வீழ்த்த உங்களாலும் என்னாலும் முடியுமா? இதற்கு மாற்றுப்பதை உண்டா?. ஒரு நற்செய்தி என்னவென்றால் நமக்குள் இருக்கின்ற அசுரனை நம்முடைய சுய பலத்தினால் அல்ல. ஆனால் கடவுளுடய பலத்தினால் வெல்ல வழி உண்டு. இந்த காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்பது தான் நமக்கு இன்றைய தீபாவளி பரிசாக அமையும். இந்த புதிரை விடுவித்து விளக்கி கொள்வோம்,
அகதீமை புறம்பானதை காட்டிலும் சிக்கலானது. நிலையான் விடுதலை வேண்டுமானால், தேவன் நம்முடைய கடந்த கால கர்மத்தில் தலையிட்டு தீமையை கண்டு தொடர்ந்து போகிற மனதை ஜெயிக்க பெலன் கொடுக்கவேண்டும். இயேசு நம்முடைய கடந்தகால தீமைக்காக தன்னை அர்ப்பணித்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மேல் சுமக்கும் போது நாம் இந்தக் கடந்த கால வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுகிறோம். இயேசு உயிர்த்தெழுந்த போது தேவனுடைய (பவித்ர ) ஆத்மா நமக்குள் வந்து தங்க செய்தார். தேவனுடைய ஆத்மா நமக்குள் தங்கி வாசம் செய்யும் போது தேவன் நமக்கு அகத்தின் குருவாக இருந்து தீமையை எல்லா சூழ்நிலையிலும் வெல்லத்தக்கதான பெலத்தை நமக்கு அளிக்கிறார். நம் அகத்தில் உள்ள குருவின் ஆலோசனைக்கு சரணடையும் போது அகத்தில் உள்ள அசுரனை எல்லா சூழ்நிலையிலும் வெற்றி கொள்கிறோம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் நுழையும் போது தீமை எல்லா சூழ்நிலையிலும் வெல்லக்கூடிய பெலத்தோடு நாம் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். தேவன் நம் மேல் எவ்வளவாய் அன்பு கூறுகிறபடியால் இந்த நாளிலும் கூட நமக்கு அகத்தில் உண்மையான தீபாவளி கொடுக்க சித்தமாயிருக்கிறார்.மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடைபெறும் தீபாவளி பண்டிகையை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லாமற் போகும்போது நித்தியத்துக்கும் நிலைக்கும் இயேசு தீபாவளியை விவரிக்க எவ்வாறு முடியும். இந்த ஞானத்தை புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் இயலாமையினால்தான் தேவன் நமக்கு அவருடைய வார்த்தையை கொடுத்து "இயேசு தீபாவளி" என்று நான் உரிமையோடு சொல்லகூடிய இந்த தினத்தை உங்களோடு கூட பகிர்ந்து கொள்கிறேன்.
நம்மை வழி நடத்தும் பரிசுத்த ஆவிக்கு நாம் சரணடையும்போது "இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்" என்று தேவன் சொன்ன வார்த்தையை ஏற்று, தேவனுடைய ஒளி இயேசுவின் ரூபத்தில் நம் இதயங்களில் பிரகாசிப்பதை உணர முடிகிறது. தேவனுடைய இந்த பொக்கிஷமானது களிமண் பாண்டங்களில் வைக்கப்பட்டு, எல்லா வல்லமையும் தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்த வைக்கிறது.
தீபாவளி பண்டிகையை இருந்து அனுபவித்து அறிந்து கொள்வது போலன்றி இயேசு தீபாவளி அனுபவிக்க இயேசவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உள்ளார்ந்தமாக இயேசுவை ( ஒளியை ) வரவேற்று, இயேசு தீபாவளியை நமக்குள் பிரகாசித்து அனுபவிக்க வேண்டும். அகதீபாவளியை பொருத்த மட்டில் நாம் எல்லோரும் களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் போல நம்மிடத்தில் சுய ஒளி இல்லாமல் இருக்கிறோம். ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய ஒளியில் பிரகாசிக்கிறோம். அந்த ஒளி நம் இருதயத்தில் சுடர்விடும் போது இந்த அனுபவத்தை பெறுகிறோம். இவ்வொளி இருளிலும் பிரகாசிக்கும்.
இருள் அதனை மேற்கொள்வதில்லை.தீபாவளி நல் வாழ்த்துக்கள். எல்லோரும் வந்து அகத்தில்
உள்ள அசுரனை அழிக்க உங்களையும் அழைக்கிறோம்.
Thursday, November 20, 2008
நகைச்சுவைகள்
இந்த நகைச்சுவை http://www.nlm-tv.com/ என்ற வலைதளத்தில் இருந்து எடுத்து இங்கு பதிவு செய்கிறேன்.
பிச்சைக்காரன்: ஐயா! போதகரையா நீங்கள் பெரிய கொடைவள்ளல், இந்த ஏழை கோப்பி குடிக்க இருபது ரூபாய பிச்சை போடுங்கள்.
போதகர்: ஏனப்பா இருபது ரூபாய் கேட்கிறாய்? கோப்பி ஐந்து ரூபாய்தானே!
பிச்சைக்காரன்: ஐயா! குறை நினைக்காதேயுங்கோ. கோப்பி குடிச்ச உடனே எனக்கு சினிமா பாக்கணும் போன்ற உணர்வு வந்திடும், அதுதான்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
டாக்டர்: பல் பிடுங்கியதற்கு அறுநூறு ரூபாய் தாருங்கள்
பாஸ்டர்: என்ன டாக்டர், பல்லுப் பிடுங்க வழமையாய் நூறு ரூபாய் தானே வாங்குவீர்கள்.
டாக்டர்: ஆமாம் நூறு ரூபாய்தான். ஆனால் உங்களுடைய பல்லைப் பிடுங்கும்போது நீங்கள் போட்ட கூச்சலாலும் அலறலாலும், பல்லுப்பிடுங்க வந்திருந்த ஐந்துபேரும் எழும்பி ஓடிவிட்டார்கள். அதனால்தான் அறுநூறு ரூபாய்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மணி: எப்பபார்த்தாலும் எனக்கு ஒரே தூக்க மயக்கமாயிருக்குது. எனக்காக ஜெபியுங்கோ பாஸ்ரர்.
பாஸ்ரர்: இரவில் தூங்கியபின் நீர் எப்பொழுது விழித்துக்கொள்வீர்?
மணி: ஜன்னல் வழியே சூரியனின் கதிர்கள் என்மேல் விழும்போது விழித்துக்கொள்வேன்.
பாஸ்ரர்: ஆகா! அது நல்லது விடியற்காலையிலேயே எழும்பும் பழக்கம் உம்மிடமுள்ளது.
மணி: நான் நித்தரைகொள்ளும் அறையின் ஜன்னல் மேற்குப்பக்கம் பார்த்தபடி உள்ளது. அதனால் பின்னேர வெய்யிலின் கதிர்கள்தான் என்மேல்பட வாய்ப்பிருக்கிறது.
பாஸ்ரர்: நம் மகன் நல்ல புத்திசாலியாய் இருக்கறான். இந்த மூளையை நம்மிடமிருந்துதான் பெற்றிருக்கிறான்.
மனைவி: உங்களிடமிருந்துதான் அவன் பெற்றிருக்க வேண்டும். என்னுடைய மூளை என்னிடமே இருக்கிறது.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நாதன்: நீங்கள் என் காதுகேட்பதற்காக இனி ஜெபிக்கவேண்டியதில்லை. மிக விலையுயர்ந்த காதுகேட்கும் கருவியொன்றை வாங்கியுள்ளேன்.
எவ்வளவு மெதுவாகக் கதைத்தாலும், என் காது கேட்கும்.
பாஸ்ரர்: எந்த கம்பனித் தயாரிப்பு உந்தக் கருவி
நாதன்: எட்டு மணி ஆகிறது.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சோதி: அந்தப் பாஸ்ரர் மூன்று மாதத்திலே என்னை நடக்க வைப்பதாகச் சொல்லி, எனக்காக n ஜபித்தார். அவர் சொன்னபடியே இப்பொழுது நான் நடந்து
திரிகிறேன்.
பூபதி: ஆச்சரியமாயிருக்குதே!
சோதி: வியாதியாய் கிடந்த அந்த மூன்று மாதத்திற்குள் பட்ட கடனை அடைப்பதற்காய் என் காரை விற்றுவிட்டேன். இப்பொழுது பொடி நடைதான். பாஸ்ரர் சொன்னபடியே என்னை நடக்க வைத்துவிட்டார்.
---------------------------------------------------
சோதி: அந்தப் பாஸ்ரர் மூன்று மாதத்திலே என்னை நடக்க வைப்பதாகச் சொல்லி, எனக்காக ஜெபித்தார்.
அவர் சொன்னபடியே இப்பொழுது நான் நடந்து திரிகிறேன்.
பூபதி: ஆச்சரியமாயிருக்குதே!
சோதி: வியாதியாய் கிடந்த அந்த மூன்று மாதத்திற்குள் பட்ட கடனை அடைப்பதற்காய் என் காரை விற்றுவிட்டேன்.
இப்பொழுது பொடி நடைதான். பாஸ்ரர் சொன்னபடியே என்னை நடக்க வைத்துவிட்டார்.
--------------------------------------------------------
நாதன்: நீங்கள் என் காதுகேட்பதற்காக இனி ஜெபிக்கவேண்டியதில்லை. மிக விலையுயர்ந்த காதுகேட்கும் கருவியொன்றை வாங்கியுள்ளேன்.
எவ்வளவு மெதுவாகக் கதைத்தாலும், என் காது கேட்கும்.
பாஸ்ரர்: எந்த கம்பனித் தயாரிப்பு உந்தக் கருவி?
நாதன்: எட்டு மணி ஆகிறது.
-----------------------------------------------------
பாஸ்ரர்: நம் மகன் நல்ல புத்திசாலியாய் இருக்கறான். இந்த மூளையை நம்மிடமிருந்துதான் பெற்றிருக்கிறான்.
மனைவி: உங்களிடமிருந்துதான் அவன் பெற்றிருக்க வேண்டும். என்னுடைய மூளை என்னிடமே இருக்கிறது.
-----------------------------------------------------------------
மணி: எப்பபார்த்தாலும் எனக்கு ஒரே தூக்க மயக்கமாயிருக்குது. எனக்காக ஜெபியுங்கோ பாஸ்ரர்.
பாஸ்ரர்: இரவில் தூங்கியபின் நீர் எப்பொழுது விழித்துக்கொள்வீர்?
மணி: ஜன்னல் வழியே சூரியனின் கதிர்கள் என்மேல் விழும்போது விழித்துக்கொள்வேன்.
பாஸ்ரர்: ஆகா! அது நல்லது விடியற்காலையிலேயே எழும்பும் பழக்கம் உம்மிடமுள்ளது.
மணி: நான் நித்தரைகொள்ளும் அறையின் ஜன்னல் மேற்குப்பக்கம் பார்த்தபடி உள்ளது.
அதனால் பின்னேர வெய்யிலின் கதிர்கள்தான் என்மேல்பட வாய்ப்பிருக்கிறது.
-------------------------------------------------------------
டாக்டர்: பல் பிடுங்கியதற்கு அறுநூறு ரூபாய் தாருங்கள்
பாஸ்டர்: என்ன டாக்டர், பல்லுப் பிடுங்க வழமையாய் நூறு ரூபாய் தானே வாங்குவீர்கள்.
டாக்டர்: ஆமாம் நூறு ரூபாய்தான். ஆனால் உங்களுடைய பல்லைப் பிடுங்கும்போது நீங்கள் போட்ட கூச்சலாலும் அலறலாலும்,
பல்லுப்பிடுங்க வந்திருந்த ஐந்துபேரும் எழும்பி ஓடிவிட்டார்கள். அதனால்தான் அறுநூறு ரூபாய்.
-----------------------------------------------------------------------------------------
பிச்சைக்காரன்: ஐயா! போதகரையா நீங்கள் பெரிய கொடைவள்ளல், இந்த ஏழை கோப்பி குடிக்க இருபது ரூபாய பிச்சை போடுங்கள்.
போதகர்: ஏனப்பா இருபது ரூபாய் கேட்கிறாய்? கோப்பி ஐந்து ரூபாய்தானே!
பிச்சைக்காரன்: ஐயா! குறை நினைக்காதேயுங்கோ. கோப்பி குடிச்ச உடனே எனக்கு சினிமா பாக்கணும் போன்ற உணர்வு வந்திடும், அதுதான்.
பிரசங்கி: கேளுங்குகள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசு சொன்னார்.
கடன் கொடுத்தவர்: ஜயா நானும்தானே அனுதினமும் உங்களை தேடுகிறேன் என்னை கண்டவுடனே
ஓடி ஓளிச்சிக்கறீங்க! அடிக்கடி உங்கள் வீட்டுக் கதவை தட்டினேன்!எத்தனை தடவை தந்த காசைத் திருப்பித்தரும்படி கேட்டிருப்பேன்!???
பிரசங்கி: தம்பி! பிரசங்கத்திலை "" இயேசு சொன்னார்'' என்று தானே சொன்னேன்.:நான் சொல்கிறேன்" என்று சொன்னேனா?
கடன் கொடுத்தவர்: ??? எதுக்கும் வீட்டை போய் {1 தீமோத் 4: 16} ஜ வாசியுங்கோ.
----------------------------------------------------
பேரன்: தாத்தா, உங்கட பென்சன் காசுல 10,000 ரூபா தர முடியுமா?
தாத்தா: நிச்சயமாக தாரன், ஆனா நீ எப்ப திருப்பி தருவாய்
பேரன்: எனக்கு பென்சன் கிடைத்ததும் தருகிறேன் தாத்தா
தாத்தா:-------????
{சொல்லப்படுத் எல்லா வார்த்தையையும் கவனியாதே கவனித்தால் உன் வேலைக்காரன்
உன்னை நிந்திப்பதை கேள்விப்பட வேண்டியதாயிருக்கும். பிர 7:21
----------------------------------------
பால்பாண்டி: நான் தீப்பெட்டி கடைக்காரனுடைய மகளை கட்டினது தப்பா போச்சு
நண்பன்: ஏன்டா அப்படி சொல்லுராய் பாண்டி?
பால்பாண்டி : எதுக்கு எடுத்தாலும் எரிஞ்சு விழுகிறா.
-----------------------------------------------
ஆசிரியர் : பீட்டர் இமய மலை எங்குள்ளது என்று சொல்லு பாப்பம்?
பீட்டர் : தெரியாது சார்!!
ஆசிரியர் : மேசை மேல் ஏறி நில்லு
பீட்டர் : மேசை மேல் ஏறினால் தெரியுமா சேர்?
ஆசிரியர் : --------------????
Tuesday, April 8, 2008
உலகளாவிய தமிழர் சமயம்-சீர்காழி சிவ.சந்திரசேகரன்.
தமிழ்நாட்டில் வளர்ந்த தமிழர் சமயங்களான சைவமும்
,வைணவமும் உலகளாவிய தமிழர் சமயத்தின் தமிழகக் கிளைகளாகும்."
தென்னா டுடைய சிவனே போற்றி!எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
!"என்பது மணிவாசகரின்
(மாணிக்கவாசகரின்) திருவாக்கு.தென்னாட்டில் சிவன் என்ற பெயரால் வழங்கப்படும் முழு முதற் கடவுள்தென்னாட்டிற்கு மட்டும் உரியவரல்ல
; அனைத்து நாடுகளுக்கும் உரியவர் என்னும் கருத்து இதனுள் அடங்கி உள்ளது.ஆகவே,சிவன்,விஷ்னு பற்றிப் பாடியுள்ள சைவ,வைணவ பாடல்களில் உள்ள ஆழத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகளாவிய மதங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
உலகளாவிய மற்ற மதங்களைப் பற்றி முழுமையாக அறியாதவர்களுக்கு சிவனைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளல் முடியாத ஒன்றாகும்
.இந்த நோக்கில் திருமூலர் எழுதியுள்ள திருமந்திரத்திற்கும்,கிறிஸ்தவ வேத நூலாகிய பைபிளுக்கும் உள்ள தொடர்புகள் இங்கு ஆராயப் படுகின்றன,திருமந்திரம் ஆராயப்படும்போது,திருமந்திரத்தின் கருத்துத் தொடர்பான மற்ற சைவ நூல்களும் முழுமையான கருத்துத் தெளிவிற்காக அதாவது எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தொடர்
-1
மையக்கருத்து
:இறைவன் பூமியில் மனிதனாகப் பிறந்து வந்து மனிதர்களின் பாவத்தைப் போக்கினார்.
பைபிள்
: எல்லாரும் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்துபோயினர்.(ரோமர் 3:23) இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்கு கழுவாய்..........
தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.மனித உருவில் தோன்றி..........கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்
பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார்
.பிள்ளைகள் மாமிசத்தையும்,இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும்,இரத்தத்தையும் உடையவரானார்.(எபிரேயர் 2:14)நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரை பாவ நிலை ஏற்கச் செய்தார்
.(2 கொரிந்தியர் 5:21)
விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய்
மெய்கொண்டுதண்ணின்ற தாளை தலைக்காவல்
முன்வைத்துஉண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்புஅருத் தானே
-திருமந்திரம் 113.பத உரை:
விண்ணின்று இழிந்து
- பரம்பொருள் விண்ணுலகை விட்டிறங்கி,மண்ணுலகை வந்து அடைந்து.
வினைக்கு ஈடாய் மெய் கொண்டு
-வினைக்கு இடமான மனித உடம்பு எடுத்து
தண்ணின்ற தாளை
-குளிர்ச்சி பொருந்திய திருவடிகளை
தலைக்காவல் முன்வைத்து
-ஆன்மாக்களுக்குப் பாதுகாவலனாக வைத்து,
உண்ணின்று உருக்கி
-உள்ளத்துள்ளே தன் திருவருள் புகச் செய்து,
ஓர் ஒப்பிலா ஆனந்த
-ஒப்புவமை கூற இயலாத பேரானந்தப் பெருவெள்ளம் பெருக்கெடுத்தோட
கண்நின்று காட்டி
-கண்கள் அருள் ஓளி கண்டுகளிக்க செய்து
களிம்பு அறுத்தானே
-பாச தளைகளை,பாவ வினைகளை அறுத்தெறிந்தான்.
பரம்பொருள் விண்ணுலகை விட்டு இறங்கி
,மண்ணுலகை வந்து அடைந்து,மனித உடம்பு எடுத்து,ஆன்மாக்களின் உள்ளத்தில் தன்திருவருளைப் புகச்செய்து
,கண்கள் அருள் ஒளியைக் கண்டு இன்பமடையச் செய்து,பாவத்தை போக்கினான்.
இக்கருத்தையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தெளிவாக விளக்குகிறார்
.
அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே
.-
திருவாசகம்,போற்றித் திரு அகவல்.
பிரபஞ்சத்துக்கு அப்பால் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற பரமன்
, பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகிய இந்த நில உலகில் பரமகுருவாய் வந்துஎன்னை ஆண்டுகொண்டது அவனுடைய பெருமைக்கோர் எடுத்துக் காட்டன்றோ
!இறைவனின் இச்செய்கையை வெகு சாதரணமாக எண்ணிவிடக் கூடாது
.மெய்தரு வேதியனாகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
.-போற்றித் திரு அகவல்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதம் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரான் ஆவாரே
-
திருவார்த்தை 7
புண்ணியனாகிய இறைவன் இம்மண்ணில் வந்து தோன்றி
,பேதம் கெடுத்தான்.(இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிரிவினையை அகற்றினார்.)இக்கருத்தையே
இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான்
.போற்றிப்பஃறொடை69
என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது
.
'
அவதார்' என்று சமஸ்கிருதச் சொல்லிற்கு 'இறங்கி வருதல்' என்பது பொருள் .இதன் தமிழ் வடிவமே 'அவதாரம்' என்பது ஆகும்.இறங்கி வருதல் என்று கூறினால்
,
-
யார் இறங்கி வந்தார்?
-
எங்கிருந்து இறங்கி வந்தார்?
-
எங்கு வந்தார்?
-
எவ்வடிவத்தில் இறங்கி வந்தார்?
1,யார் இறங்கி வந்தார்?
பரம்பொருள்
-அருபரத்தொருவன்-புண்ணியன்-கடவுள்-பிறவா முதல்வன்.
2,
எங்கிருந்து இறங்கி வந்தார்?விண்ணின்று இழிந்து
-அருபரத்திலிருந்து.
3,
எங்கு வந்தார்?அவனியில் வந்தார்
-மண்ணிடை வந்தார்.
4,
எவ்வடிவத்தில் இறங்கி வந்தார்?வினைக்கு ஈடாய் மெய்கொண்டு வந்தார்
.குருவாக வந்தார்,பிறந்து வந்தார்.
5,
ஏன் இறங்கி வந்தார்?களிம்பு
(பாவம்)அறுக்க வந்தார்.வினை கெட வந்தார்.பேதம் கெடுத்து அருள் செய்ய வந்தார்இறவா இன்பத்து எமை இருத்த வந்தார்
.
-(
இன்னும் வரும்)
திராவிட சமயம் இதழ் ஏப்ரல்
2008
Tuesday, February 12, 2008
தோமா வழி ஆதி இந்தியக் கிறித்தவம்
Monday, January 28, 2008
பாவத்திலிருந்து விடுதலை
வேதபகுதி: 1யோவான்
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். "
1யோவான் 3:9
ஒரு மனிதர் தன்னுடைய வீட்டை விற்க விரும்பினார். ஆனால் அந்த வீட்டின் ஒரு மூலையில் உள்ள ஒரே ஒரு அறை மட்டும் தனக்குச் சொந்தமாக இருக்கும் என்று கூறினார். இந்த வீட்டை வாங்குவதற்கு ஒருவரும் முன்வரவில்லை. கடைசியில் ஒரே ஒருவர் அந்த வீட்டைக் குறைந்த விலைக்கு வாங்க முன் வந்தார்.வீட்டை வாங்கியக் குடும்பத்தினர் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் வீட்டை விற்ற அந்த நபர் ஒரு சில ஆண்டுகள் கழித்து தான் விற்ற வீட்டைப் பார்ப்பதற்காக வந்தார். பின்னர் வீட்டை வாங்கிய நபரிடம் தான் மீண்டும் இந்த வீட்டை வாங்குவதாகவும் வீட்டை தங்களுக்கு விற்று விடும் படிக் கேட்டார். அதற்கு வீட்டை வாங்கிய நபர் தான் விற்க விரும்பவில்லை என்று கூறினார். வீட்டை விற்ற நபர் சென்று விட்டார். ஒரு சில நாட்கள் கழித்து விட்டை விற்ற நபர் தனக்குச் சொந்தமான அந்த அறையில் ஒரு செத்த நாயைக் கொண்டு வந்துத் தொங்க விட்டுச் சென்றார். வீட்டை வாங்கிய நபரால் அந்த வீட்டில் இருக்க மூடியாமல் வெளியேற வேண்டியதாகி விட்டது.
ஆம் பிரியமானவர்களெ, இப்படித்தான் நாமும் நம்மை முழுமையாக ஆண்டவரிடம் ஒப்புக்கொடுக்காமல், ஏதாவது ஒரு சிலத் தவறுகளைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஒருகட்டத்தில் பாவம் நம்மை ஆட்கொண்டு நாம் முழுவதுமாகச் சாத்தானின் பிள்ளைகளாகி விடுகின்றோம். மேலே கூறிய சம்பவத்தில் வீட்டை வாங்கிய நபர் ஓரத்தில் உள்ள ஒரே ஒரு சிறிய அறை தானே அதனால் நமக்கு என்ன நஷ்டம் வரப்போகிறது விலை குறைவாக விடூ கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் வீட்டை வாங்கி விட்டார். ஆனால் அவரால் நிரந்தரமாக அவரால் குடியிருக்க முடியவில்லை.
நாமும் நம்முடைய சிற்றின்பத்திற்காக ஒரு சில பாவங்களைச் செய்துக் கொண்டிருப்போமானால் "நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்@ அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" என்று 1 யோவான் 1 :6 - 8 ல் சொல்லியிருக்கிறபடி நாம் இன்னும் இருளில் தான் இருக்கிறோம். ஒளி நம்மிடத்தில் இல்லை. நாம் நம்மைப் பூரணமாய் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கும் போது தான் அவர் நம்மை ஆசிர்வதிப்பார்.
சிந்தனை: :"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" 1 யோவான் 1:9
ஜெபம்: தேவனே நான் என்னை முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். நீரே என்னை வழிநடத்தி பரலோக வாழ்விற்குப் பங்காளராக என்னை மாற்றும். ஆமேன்.
http://sathiyavasanam.blogspot.com/2008/01/blog-post_28.html
Friday, January 18, 2008
சினிமா பாடகர் ஜாலி ஆபிரஹாம் எப்படி இயேசுவிடம் திரும்பினார்
About Jollee Abraham - Cinema Singer Turn to Christ
JOLLEE ABRAHAM, B.Sc. Botany., Graduate, from Sacred Heart College, Thevara, Cochin. He arrived at Chennai in 1974 for a recording by KALABHAVAN at HMV. It was a Malayalam Christian Devotional Songs recording. Two songs were sung by Padmabhushan K.J.Yesudas and two songs by Jollee Abraham. It was a good entry for him. His very first recording was Christian songs. He later became the Assistant Recording Officer at HMV, The Gramophone company of India Ltd., Chennai. The famous Malayalam Movie Producer/Director/Lyric writer Shree. Shreekumaran Thambi gave him the first break in his film, CHATTAMBI KALYANI where he has given voice for Sri. Prem Nazir, the song titled " JAYIKKANAI JANICHAVAN NAAN", music by Sri.M.K.Arjunan.
He, then got opportunity to sing for other famous Music Directors like Messrs. M.S.VISWANATHAN, G.DEARAJAN, DAKSHINAMOORTHY, SALEEL CHOWDHRY, SHYAM, A.T. UMMER. JOHNSON, RAVINDRAN, KANNOOR RAJAN and also SHANKAR GANESGH. In Tamil, Mellisai Mannar M.S.VISWANATHAN gave him the first opportunity in the film, " VANAKKATHUKURIYA KADHALIYE" - Song - Adiyenai Paramma. In Malayalam he was fortunate enough to sing a few more songs of MSV of which "RAJNIGANDHI" in film, "PANCHAMI" was a Super hit. People still remember his voice through the Tamil song " Meena Reena, Seetha Geetha" for "Oruthalai Ragam". He later sang for Isai Gnani ILAIYARAJA for the film "KATTA PANCHAYATHU"- Song "Oru Chinna Manikkuyilu" and the film, " MAYA BAZAAR 95" -Song Adada Angu Vilaiyadum. Afterwards he had the opportunity to record songs for other music directors like Sri. Rajan Nagendra, Vijaya bhaskar, T.Rajender, T.G.Lingappa, V.Kumar, Gunasingh, Shivaji Raja, S.P.Venkatesh, etc for other languages like Telugu, Kanada & Hindi.
He learnt his basic Carnatic lessons from Sri.Kumbalam Baburaj, later lessons from Sri.Natesa Bhaghavadhar, and advanced lessons from Sri. R.M.Sundaram , one of the deciples of Sri.G.N.Balasubramaniam. During a span of 30 years he was able to sing nearly 600 film songs which include Tamil, Malayalam, Kanada & Telugu and also Hindi.
During the year 1974, he started singing Tamil Christian Devotional songs for Madras Pentecostal Assembly who were the first ones to release Christian songs in audio cassettes. He also sang for all 14 volumes of MPA. Now, he has to his credit, nearly 10,000 Christian devotional songs. He is an A graded artiste of ALL INDIA RADIO and Doordarshan, Chennai.
Along with film songs and Christian devotional songs, he was also singing many other devotional songs. The year 1992 was a turning point in his life when he realised that his religious beliefs did not permit him to use his God given talents to propagate other beliefs. He therefore stop singing other devotional songs.
He started a Digital Recording Studio at Chennai in the year 1991 by name "ROHITH RECORDING STUDIOS" and an Audio Company named " ROHITH RECORDING COMPANY'. Under this banner he has released only Christian Devotional songs in different languages. In Tamil, the company has 35 Audio Cassettes, 12 Compact Discs & 3 Video Compact Discs, in Malayalam 8 Audio Cassettes, 3 Compact Discs, Telugu, Kanada & English Cassettes and Cd's to its credit. Rohith Recording Co., was the first one to release Christian songs Video Album in Tamil called " EKKALAM".
He has travelled all over the world and performed film songs concerts at most of the major cities of the world. In the year 1997, he also took a decision of singing only for the Glory of the God. He performed his first Christian Devotional Concert in 1997 at U.S.A. & Switzerland, later at the Gulf countries, Sri Lanka, etc. He has a Music Troup called "HOSANNA" performing only Christian devotional songs. He also recently received an achievement award for channeling his talents with the right perspective from "The South Zone Christian Leaders' Revelation Conference" Bangalore. And was also awarded as " SANGEETHA KALA PRAPOORNA" by "GURUKUL LUTHERAN THEOLOGICAL COLLEGE & RESEARCH INSTITUTE", Chennai in the year 2002.
http://tamilchristianonline.blogspot.com/2008/01/about-jollee-abraham-cinema-singer-turn.html

















